சேனாபதி இஸ் பேக்: ஷங்கர் வெளியிட்ட சூப்பர் புகைப்படம்!!!

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (18:50 IST)
இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் புகைப்படம் ஒன்ரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர்,  ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  
 
ஷங்கர் இயக்கத்தில் 14வது படமாக உருவாகிவரும் இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இன்று கமல்ஹாசனின் 65 வது பிறந்தநாள் என்பதால் கமலின் புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார் ஷங்கர். 
 
கோட்டையில் நின்றபடி பார்க்கும் இந்தியன் தாத்தா புகைப்படத்தோடு   ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்