ரஜினியின் ’தர்பார்’ மோஸன் போஸ்டர் ரிலீஸ்...கமல் வாழ்த்து ’டுவீட்’..பொங்கலுக்கு’ ட்ரீட்’

வியாழன், 7 நவம்பர் 2019 (17:55 IST)
நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளான நாளை ‘தர்பார்’ படத்தின் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது தர்பார் படத்தின் மோஸன் போஸ்டர்ம் அனிருத்தின் தீம் மியூசிக்குடன் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்  நண்பர் @rajinikanthஅவர்களின் #DarbarMotionPoster என ஹேஸ்டேக் செய்துள்ளார்  தற்போது இது வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. நீண்ட வருடங்கள் கழித்தி ரஜினி போலீஸாக நடித்துள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் பேராவலுடன் காத்துள்ளனர்.
 
தர்பார் படத்தின் அனைத்து பணிகளும் முடிவு பெற்றுவிட்ட நிலையில் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக்கை நாளை வெளியிட உள்ளனர். தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் நாணயங்களின் இரு பக்கம் போல திகழ்பவர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும்!
 
இந்நிலையில் நாளை கமல்ஹாசன் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம் கமல்ஹாசனால் தர்பார் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக்கும் வெளியாக உள்ளது.
 
தர்பார் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு போஸ்டரை நடிகர் கமல்ஹாசனும், இந்தி போஸ்டரை நடிகர் சல்மான் கானும், மலையாள போஸ்டரை நடிகர் மோகன்லாலும் வெளியிட இருக்கிறார்கள். உலக நாயகன் பிறந்த தினத்தில் சூப்பர் ஸ்டார் போஸ்டர் மற்றும் மியூசிக் வெளியாவது இரு தரப்பு ரசிகர்களையும் கொண்டாட்ட மனநிலையில் ஆழ்த்தியுள்ளது. இதை முன்னிட்டு ரசிகர்கள் கமல் பிறந்தநாளில் தர்பார் தீம் மியூசிக் ரிலீஸ்! – ட்ரெண்டான #DarbarThiruvizha என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது, நடிக்கும் தர்பார் படத்தின் ’மோஸன் போஸ்டர்’ அனிருத்தின் தீம் மியூசிக்குடன் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்  நண்பர் @rajinikanthஅவர்களின் #DarbarMotionPoster என ஹேஸ்டேக் செய்துள்ளார் . தற்போது இது வைரலாகி வருகிறது.
 
இதுகுறித்து அனிருந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், Idhu Thalaivarin @rajinikanth #DARBAR#DARBAR

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்