தென்னிந்திய சினிமா அற்புதமானது… நடிகர் ஷாருக் கான் பாராட்டு!

vinoth
வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (07:41 IST)
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக ஷாருக் கான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜொலித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து அவர் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது வேறு அவரை மனதளவில் பாதித்தது.

இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படமும் வெளியாகி 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்நிலையில் அவருக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய ஷாருக் கான் “ தென்னிந்திய சினிமாவுக்கும் இந்தி சினிமாவுக்கும் நிறைய நேர்மறையான ஒற்றுமைகள் உள்ளன.  கதை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் அற்புதமானது. ஆர் ஆர் ஆர் மற்றும் பாகுபலி ஆகிய படங்கள் உலகளவில் கவனம் பெற்றவை” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்