ஷாருக் கான் உருவம் பொறித்த தங்க நாணயம்.. பாரீஸ் மியூசியம் அளித்த கௌரவம்!

vinoth

வியாழன், 25 ஜூலை 2024 (10:21 IST)
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக ஷாருக் கான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜொலித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து அவர் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது வேறு அவரை மனதளவில் பாதித்தது.

இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படமும் வெளியாகி 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்நிலையில் இப்போது ஷாருக் கானை பெருமைப் படுத்தும் விதமாக பாரீஸில் உள்ள க்ரவின் மியூசியம் அவர் உருவம் பொறித்த தங்க நாணயத்தை வெளியிட்டுள்ளது. இந்த பெருமையப் பெரும் முதல் இந்திய நடிகர் ஷாருக் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்