நேற்றைய ரிலீஸில் வின்னர் செம்பி தான்… முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (15:04 IST)
செம்பி திரைப்படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் நல்ல நிலையில் உள்ளது.

இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்தன. இதையடுத்து அவர் இயக்கிய செம்பி திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

ஆனாலும் நேற்று ரிலீஸான நான்கு படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக செம்பிதான் அமைந்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் 50 லட்சத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்