டிரைலரில் இடம்பெற்ற அரசியல் வசனத்தை நீக்கிய செம்பி படக்குழு… ரசிகர்கள் ட்ரோல்!

வெள்ளி, 30 டிசம்பர் 2022 (13:52 IST)
செம்பி படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் சுவாரஸ்யமான ஒரு தகவலைப் படக்குழு பகிர்ந்து வருகிறது.


இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்தன.

இதையடுத்து அவர் இயக்கும் அடுத்த  படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வினைக் கதாநாயகனாக்கியுள்ளார். பிரபுசாலமனின் மற்ற படங்களைப் போல இந்த படமும் காடு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டதுதானாம். முழுக்க முழுக்க ஒரு பேருந்தில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் ஒரு காட்சியில் அரசியல் வாதி ஒருவர் குழந்தையிடம் “பாப்பா, பாட்டிய எனக்கு ஓட்டு போட சொல்லு நான் உன்ன டாக்டர் ஆக்கிவிடுறேன்” என சொல்வார். அடுத்த காட்சியில் குழந்தையிடம் கோவை சரளா “எவனுக்கு ஓட்டு போட்டாலும் நீ டாக்டர் ஆக மாட்ட.. நீ நல்லா படிச்சாதான் டாக்டர் ஆகலாம்” என சொல்வார்.

இந்த இரு காட்சிகளையும் வெட்டி ஒட்டி, சமூகவலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் அந்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாக படம் பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தெரிவித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்