ராங்கி படத்தின் கதையும் காப்பியா?... கண்டுபிடித்து ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (15:00 IST)
த்ரிஷா நடித்துள்ள ராங்கி படம் நேற்று ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ராங்கி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி கடந்த சில ஆண்டுகளாக நிலையில் பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு திரிஷாவுக்குக் கிடைத்த ஆதரவால் நேற்று ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இந்த படத்தில் திரிஷா பத்திரிக்கையாளராக நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிலர் ராங்கி திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட்டில் வெளியான ‘ப்ரொபைல்’ என்ற படத்தின் அட்டைக்காப்பி என விமர்சித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்