தனுஷ் செல்வராகவன் படத்தின் கதை விக்ரம் படத்தின் கதையா?

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (11:21 IST)
தனுஷ் செல்வராகவன் இணைந்து உருவாக்க இருக்கும் படத்தின் கதை சில ஆண்டுகளுக்கு முன்னர் விக்ரம்மை வைத்து செல்வராகவன் உருவாக்கிய சிந்துபாத் படம்தான் என சொல்லப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்  உருவாகவுள்ள ஆயிரத்தில் ஒருவர் 2 பாகத்தின் டைட்டில் லுக் நாளை வெளியாகவுள்ளதாக செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரின் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், செல்வராகவன் அடுத்து எப்போது படம் எடுப்பார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தபோது,  அவர் தனது தம்பியை வைத்து இப்போது ஒரு படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

இந்த படத்தின் கதை ஏற்கனவே அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் விக்ரம் மற்றும் சுப்ரமண்யபுரம் ஸ்வாதி ஆகியோரை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி பின்னர் கைவிடப்பட்ட சிந்துபாத் படத்தின் கதைதான் என சொல்லப்படுகிறது. அதை உறுதி செய்வது போல நேற்று வெளியான போஸ்டரும் குளிர்பிரதேசத்தில் நடக்கும் கதை என்பது போலவே உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்