ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 1 லயே பல பஞ்சாயத்து பாக்கி இருக்கு – இரண்டாம் பாகத்தை தயாரிக்க போவது யார்?

திங்கள், 4 ஜனவரி 2021 (16:43 IST)
ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 படத்தை தயாரிக்கப் போகும் தயாரிப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான செல்வராகவன் கார்த்தி இயக்கத்தில் உருவாக்கிய சாகச திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்ம். அந்த படம் ரிலீஸின் போது பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் இப்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிரது. இந்நிலையில்  செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின்  இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக தகவ தெரிவித்து, இதன் போஸ்டரை புத்தாண்டுப் பரிசாகத் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிட்டார் செல்வராகவன்.

அந்த போஸ்டரில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்க உள்ளதாக மட்டுமே அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் யார் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் அந்த படத்தை தயாரிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில் முதல் பாகத்தை தயாரித்ததால் ஏகப்பட்ட கோடிகள் நஷ்டமடைந்த முதல் பட தயாரிப்பாளர் அந்த படத்தின் பார்ட் 2 தயாரிக்கவோ அல்லது தலைப்பு உரிமையை அளிக்கவோ முன் வருவார்களா என்ற சந்தேகம் வேறு திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்