தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவை முன்பே கணித்தாரா செல்வராகவன்?

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (08:27 IST)
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவை முன்கூட்டியே கணித்து செல்வராகவன் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்கள் திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக நேற்று முன்தினம் இரவு அறிவித்தனர். இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் இதனை உறுதி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து இயக்குனர் செல்வராகவன் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதியே பதிவு செய்த ட்வீட்டில் தயவுசெய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள் என்றும் இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டுவிட்டு நன்கு உணவு எடுத்து கொண்டு ஓய்வெடுங்கள் என்றும் இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு பிரச்சனையும் இருக்காது என்றும் நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார் 
 
இந்த ட்வீட் அப்போது யாருக்கும் புரியாமல் இருந்த நிலையில் தற்போது தான் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு குறித்து அவர் இதனை பதிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்