மனைவியை பிரிய இது தான் காரணமா? தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி!

செவ்வாய், 18 ஜனவரி 2022 (11:27 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ்.  இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன் உள்ளனர்.இந்நிலையில், நேற்று தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். 
 
அதில் எனக்கும் ஐஸ்வர்யாவுக்குமான 18 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தார். இதையடுத்து ரஜினியின் ரசிகர்கள் இனிமேல் உன் வாழ்க்கை ஒண்ணுமில்லமால் போகுமென தனுஷ் திட்டி தீர்த்து வருகின்றனர். 
 
இவர்கள் பிரிவதற்கு என்ன காரணமாக இருக்கும் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் கிடைத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் Covid Protocols கடைப்பிடிப்பதை காரணம் சொல்லி இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். இந்த பிரிவு அவர்களை நிரந்தர பிரிவிற்கு உள்ளாகிவிட்டது என லேட்டஸ்ட் செய்திகள் பரவி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்