ஜி வி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இடிமுழக்கம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த அந்த படம் ரிலீஸாகவில்லை. இதையடுத்து அவர் புதுமுக நடிகர் ஏகன் நடிக்கும் கோழிப்பன்னை செல்லதுரை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பாக டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து, பா விஜய் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 20 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படம் அமெரிக்காவின் ஆக்லெண்ட் பன்னாட்டி திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி அந்த விழாவில் இந்த படம் திரையிடப்படவுள்ளது. இதை இயக்குனர் சீனு ராமசாமி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.