என் வீடியோவைப் பார்த்து எஸ்.பி.பி முத்தமிட்டார்- இளையராஜா உருக்கம்!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (18:38 IST)
இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா. இவர் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி., பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணிப் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் கோலோட்சி வந்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவரது நண்பரும், இசையமைப்பாளருமான இளையராஜா ;; உனக்காக நான் காத்திருக்கிறேன். சீக்கிரம் எழுந்து வா பாலு எனப் பேசி ஒரு வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று எஸ்.பிபி.யின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் இதுபற்றி நினைவு கூர்ந்த இளையராஜா, தான் அனுப்பிய வீடியோவை பார்த்து எஸ்.பி. முத்தமிட்டதாக சரண் வாயிலாக அறிந்ததாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்