இளையராஜாவை இழிவுபடுத்திய கதாசிரியர் ரத்னகுமார்… காவல் நிலையத்தில் புகார்!

புதன், 28 ஜூலை 2021 (11:35 IST)

கருத்தம்மா உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதியவர் ரத்னகுமார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் சித்ரா லட்சுமணனுக்கு அளித்த நேர்காணலில் இளையராஜாவை ஜாதி ரீதியாக இழிவு செய்யும் விதமாக பேசியது சர்ச்சைகளை கிளப்பியது. இதையடுத்து இளையராஜாவின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து சம்மந்தப்பட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டது. ஆனாலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் இப்போது டிஜிபி அலுவலகத்தில் மறுபடியும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகு முத்து என்பவர் அளித்துள்ள புகாரில், "கடந்த பிப்ரவரி மாதம்நடிகர் சித்ரா லட்சுமணன் தான் நடத்தும் "Chai with chithra" என்ற யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் திரைப்பட கதாசிரியரும் இயக்குனருமான ரத்னகுமாரை வைத்து பேட்டி எடுத்தார். இந்த பேட்டியில் ரத்னகுமார் என்பவர் இசைஞானி இளையரஜாவை அவரது ஜாதியை மையமாக வைத்து இழிவாக பேசி உள்ளார்அதை சித்ரா லட்சுமணனும் அனுமதித்துள்ளார்.

இது தொடர்பாக மார்ச் மாதம் புகார் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இது மிக்க வருத்தமளிக்கிறது. அதனால் மீண்டும் இன்று புகார் அளித்துள்ளோம். புதிய டிஜிபி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்