40 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வருகிறது கமலுக்கு தேசிய விருது பெற்றுத்தந்த திரைப்படம்!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (16:10 IST)
40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் திரைப்படமாக அமைந்தது மூன்றாம் பிறை திரைப்படம்.

பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மூன்றாம் பிறை திரைப்படம் தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களில் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்துக்காக கமல்ஹாசன் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார்.

இந்த படம் 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாக பல திரையரங்குகளில் ஓடி வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த படம் 40 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில் பாலு மகேந்திராவின் உதவியாளர் வெற்றிமாறனும், திரைக்கதை எழுத்தாளர் அஜயன் பாலாவும் இணைந்து மூன்றாம் பிறை நினைவு மலர் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்போது அந்த படத்தை டிஜிட்டலைஸ் செய்து திரையரங்குகளில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறதாம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்