மீண்டும் ரீமேக் ஆக உள்ள விக்ரம் வேதா!

வெள்ளி, 11 மார்ச் 2022 (12:56 IST)
விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற விக்ரம் வேதா திரைப்படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை ஹ்ருத்திக் ரோஷனும் மாதவன் கதாப்பாத்திரத்தை சயிஃப் அலிகானும் ஏற்று நடிக்கின்றனர். தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரி தம்பதியினரே இந்தியிலும் இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது விக்ரம் வேதா திரைப்படம் மற்றொரு மொழியான தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. வரிசையாக இப்போது ரீமேக் படங்களில் நடித்து வரும் பவன் கல்யாண் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அவருடன் ரவி தேஜா நடிக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இயக்குனர் உள்ளிட்ட மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்