வெற்றியோ தோல்வியோ போய்க்கொண்டே இருக்க வேண்டும்… ஜகமே தந்திரம் தயாரிப்பாளர் டிவீட்!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (08:56 IST)
ஜகமே தந்திரம் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக சஷிகாந்த் ஒரு டிவீட்டை பகிர்ந்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்நிலையில் படம் ரிலீஸானதில் இருந்து பல முனைகளில் இருந்தும் எதிர்மறையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்யாமல் தயாரிப்பாளர் சஷிகாந்த் தப்பித்து விட்டார் திரையுலகினரே பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்களாம்.

இந்நிலையில் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக சஷிகாந்த் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘இலக்கை அடைதல் என்பது வெற்றியல்ல… அதில் தோற்பது தோல்வியுமல்ல… தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்