முதல்முறையாக போலந்து நாட்டில் சாதனை செய்யும் 'சர்கார'

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (20:49 IST)
தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி முதல் உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் வியாபாரம் யாரும் எதிர்பாராத தொகைக்கு விற்பனையாகி வரும் நிலையில் இந்த படம் போலந்து நாட்டிலும் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு  முன் போலந்து நாட்டில் தமிழ்ப்படங்கள் ரிலீஸானபோதிலும் ஒன்று அல்லது இரண்டு திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆவதுண்டு. ஆனால் 'சர்கார்' படத்திற்கு அதிக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் முதல்முறையாக நான்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக போலந்து நாட்டின் ரிலீஸ் உரிமை பெற்ற செவந்த் சென்ஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.  இதன்மூலம் போலாந்தில் 4 நகரங்களில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை 'சர்கார்' திரைப்படம் பெற்றுள்ளது.

மேலும் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலும் இதுவரை இல்லாத வகையில் மிக அதிக திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்றும், அதேபோல் மலேசியா, சிங்கப்பூர் போன்ற கிழக்கு நாடுகளிலும் இந்த படத்தை திரையிட அதிக திரையரங்கு உரிமையாளர்களும் முன்வந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்