சூர்யாவுக்கு வில்லனாகும் சரத்குமார்… எந்த படத்தில் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (15:27 IST)
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்க சரத்குமார் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளது உறுதியாகிவிட்டது.. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் முதல் முறையாக சரத்குமார் இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம். 90 களில் ரஜினி, கமல் ஆகிய நடிகர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த சரத்குமார், படங்களின் தோல்வி மற்றும் அரசியல் காரணமாக பீல்டில் இருந்து வெளியேறினார். இப்போது தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதையடுத்து சூர்யாவின் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்