தெலுங்கில் இயக்குனராக அறிமுகம் ஆகும் சமுத்திரக்கனி… பவன் கல்யாண் நடிப்பில் விநோதய சித்தம்!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (16:12 IST)
இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி சமீபகாலமாக அதிகளவில் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் சமுத்திரக்கனி இப்போது பிஸியான நடிகராகி விட்டார். ஆனாலும் இடையில் படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில் ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கிய படம்தான் விநோயத சித்தம். இந்த படம் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகி பரவலாக பாராட்டுகளைப் பெற்றது.

இதையடுத்து இப்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார் சமுத்திரக்கனி. தமிழில அவர் நடித்த வேடத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா நடித்த வேடத்தில் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த படத்துக்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்