சமுத்திரக்கனியோடு இணைந்து படம் பண்ணுகிறாரா சிரஞ்சீவி?

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (07:37 IST)
இயக்குனர் சமுத்திரக்கனி இப்போது தெலுங்கில் பிஸியான நடிகராகி விட்டார்.  இதற்கிடையில் அவர் 2021 ஆம் ஆண்டு ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கிய படம்தான் விநோயத சித்தம். நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி பாராட்டுகளைக் குவித்த இந்த திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் ப்ரோ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

தமிழில் சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா நடித்த வேடத்தில் சாய் தேஜும் நடித்துள்ளனர். தெலுங்கிற்காக பல மாற்றங்களை திரைக்கதையில் செய்திருந்தார் சமுத்திரக்கனி. ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பவன் கல்யாண் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது சிரஞ்சீவி சமுத்திரக்கனி இயக்கத்தில் ஒரு படத்தில் இணைய பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர் சமீபத்தில் சமுத்திரக்கனியை சந்தித்து பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்