தோனியின் எல் ஜி எம் படத்தை சீண்டாத ஓடிடி நிறுவனங்கள்!

திங்கள், 4 செப்டம்பர் 2023 (07:09 IST)
ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடித்த எல் ஜி எம் படததை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

வசூல் ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் அடுத்த படத்தைத் தயாரிக்க தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எல் ஜி எம் படத்தின் படுதோல்வியால் தோனி நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை இன்னும் எந்த ஓடிடி நிறுவனங்களும் வாங்க முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ரிலீஸாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் இந்த படம் இன்னும் எந்தவொரு ஓடிடியிலும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்