சலார் படத்தின் டீசர் படைத்த புதிய சாதனை!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (08:58 IST)
பிரபாஸ் நடித்த ‘சலார்’ படத்தின் டீசர் ஜூலை 6 ஆம் தேதி அதிகாலை வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றது. படத்தின் டீசரைப் பார்த்த ரசிகர்கள் கே ஜி எஃப் படத்தின் மூன்றாம் பாகம் போலவே இருப்பதாக கூறினர்.

ஆனாலும் டீசர் அனைத்து மொழிகளிலும் கோடிக் கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த டீசர் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 100 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.

சலார் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கேஜி எஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்