பிராஜக்ட் கே படத்தின் டிரைலர் & ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது? வெளியான தகவல்!

வெள்ளி, 7 ஜூலை 2023 (07:14 IST)
கமல்ஹாசன் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

கமல்ஹாசன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லனாக நடிப்பதில்லை. எதிர்கதாநாயகனாக இந்தியன், ஆளவந்தான் உள்ளிட்ட சில படங்களில் தோன்றி இருந்தாலும், அந்த படங்களில் கதாநாயகனாகவும் அவரே நடித்திருந்தார். 2.0 படத்தில் கூட வில்லனாக நடிக்க வந்த அழைப்பை ஏற்க மறுத்தார்.

ஏற்கனவே இந்த படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் போன்றவர்களும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிள், டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி ஆகியவை அமெரிக்காவில் உள்ள காமிக் கான் என்ற இடத்தில் ஜூலை 20 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்