பிரபாஸின் ''சலார்'' பட டீசர் புதிய சாதனை...

வியாழன், 6 ஜூலை 2023 (17:58 IST)
பிரபாஸின் ‘சலார்’ பட டீசர் இன்று வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.

கே.ஜி.எப்.1-2 படங்களின் இயக்குனர் பிரஷாந்த் நீல் பிரமாண்டமான இயக்கி வரும் படம் சலார்.  கேஜிஎஃப்-2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து   நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிரபாஸுடன் இணைந்து இப்படத்தில் பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன்,ஜகபதிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

ஹாம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு புவன் கவுடா ஒளிப்பதிவு செய்கிறார்.  உஜ்வல் குல்கர்னி எடிட் செய்கிறார்.

இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,   செப்டம்பர் மாதம் 28  ஆம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தில் டீசர் இன்று அதிகாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று  சலார் பட டீசர் வெளியாகும் சமூக வலைதளங்கை ஆக்ரமித்துள்ளது.

இப்பட டீசர்  வெளியாகி 12 மணி  நேரத்தில் 3.6 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களையும், 65 ஆயிரத்திற்கும் அதிகமான கமெண்டுகளையும் பெற்றும், டிரெண்டிங்கில் நம்பர் 1 ல் இருந்து  சாதனை படைத்துள்ளது.

இதனால் பிரபாஸ் ரசிகர்கள் மற்றும் சலார் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

The striking #SalaarTeaser hits 45 Million+ views in just 12 hours

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்