சிறு பட்ஜெட் படங்கள்தான் முதுகெலும்பு… தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (07:29 IST)
விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் இறுகப் பற்று. எலி, தெனாலி ராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவ்ராஜ் தயாளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்த படம் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இப்போது ப்ரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு “சமீபகாலமாக சின்ன பட்ஜெட் படங்கள் பற்றிய விவாதங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. சிறிய பட்ஜெட் படங்களும்தான் சினிமாவை தாங்கி பிடிக்கின்றன. இந்த படங்களால் தொழிலாளர்களுக்கு வருவாய் கிடைக்கிறது. அதனால் இதுபோன்ற படங்கள்தான் சினிமாவின் முதுகெலும்பு. ஆனால் இதுபற்றி விஷால் பேசியது ஒரு எச்சரிக்கை உணர்வால்தான்” எனக் கூறியுள்ளார்.

மார்க் ஆண்டனி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷால் “நாலு கோடி ரூபாய் எல்லாம் பணம் வைத்துக்கொண்டு யாரும் சினிமா தயாரிக்க வராதீர்கள்” எனப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்