சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி புஸ்வானமாகியது. சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சூர்யா கடைசியாக திரையரங்குகளில் ஒரு வணிக ரீதியான வெற்றிப்படம் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
சூர்யா கடந்த சில ஆண்டுகளாக நேரடி பாலிவுட் படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்தார். பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கடந்த ஒரு ஆண்டுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. மகாபாரத கதையை மையப்படுத்தி உருவாகும் கர்ணா என்ற இந்த படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது மிகப்பிரம்மாண்டமாக பேன் இந்தியா படமாக உருவாகும் எனவும் பாலிவுட் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
ஆனால் இப்போது கங்குவா தோல்வியால் அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் மிகப்பெரிய பட்ஜெட் காரணமாக அந்த படத்தை எடுத்தால் பெரிதாக லாபம் சம்பாதிக்க முடியாது என தயாரிப்பு நிறுவனம் நினைப்பதாக சொல்லப்படுகிறது. கங்குவா படத்தின் மூலம் சூர்யாவிற்கு இந்தி பேசும் மாநிலங்களில் பெரிய மார்க்கெட் இல்லை என்பது ஊர்ஜிதமாகிவிட்ட நிலையில் தேவையில்லாமல் கையை சுட்டுக்கொள்ள வேண்டாம் என்று இதுவரை செலவு செய்த தொகை போனாலும் பரவாயில்லை என இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.