இயக்குனர் மோகன் இயக்கியுள்ள ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5.06 மணிக்கு வெளியாக உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மோகன்ஜி இயக்கியுள்ள திரவுபதி என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியான உடன் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு ஒரு பிரிவினர் வரவேற்பும் இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த படம் இந்த படம் எதிர்ப்பு காரணமாகவே வெற்றி பெற்றது என்றும் கூறலாம்
இந்த நிலையில் மோகன் இயக்கியுள்ள அடுத்த திரைப்படமான ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் சென்சார் சான்றிதழ் பெற்றது. இந்த நிலையில் இன்று மாலை 05.06 மணிக்கு இந்த படம் ட்ரைலர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ட்ரெய்லரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ரிச்சர்ட், தர்ஷாகுப்தா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜுபின் என்பவர் இசையமைத்துள்ளார்