இயக்குனர் மோகன் ஜியின் ‘ருத்ரதாண்டவம்’ சென்சார் தகவல்!

செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (18:47 IST)
இயக்குனர் மோகன் ஜி இயக்கிய திரவுபதி என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல் குறித்த செய்தி வெளியானது 
 
ருத்ரதாண்டவம் திரைப் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
திரவுபதி படத்தில் நடித்த நாயகன் ரிச்சர்ட்ஸ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா ஆகியோர் இணைந்து நடித்த இந்த திரைப்படத்தில் கௌதம்மேனன் முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கிறார். 7ஜி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்