விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும் ‘பூமிகா’: டிரைலர் ரிலீஸ்

ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (20:03 IST)
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான திரைப்படம் பூமிகா
 
இந்த படம் வரும் 23ஆம் தேதி விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் கடந்த சில மாதங்களாக ஓடிடி மற்றும் நேரடியாக தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன 
 
அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’திட்டம் இரண்டு’ என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியான நிலையில் அவர் நடித்த அடுத்த திரைப்படமான பூமிகா என்ற திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது
 
இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியான நிலையில் இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படம் பேய் படம் என்று டிரைலரில் இருந்து தெரிய வருகிறது இந்த ட்ரெய்லர் சூப்பர் ஹிட்டானதை அடுத்து படமும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்