ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (08:06 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த ஆர்ஜே பாலாஜி கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம் 
 
அவர் ஹீரோவாக நடித்த எல்கேஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷங்க ஆகிய மூன்று படங்களும் நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது அவர் ஒரு திரைப்படத்தை நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 
 
‘ரன் பேபி ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது
 
ஆர்ஜே பாலாஜியின் முந்தைய படங்கள் போலவே இந்த படமும் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்