ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

வியாழன், 10 நவம்பர் 2022 (14:27 IST)
ஆர்ஜே பாலாஜி நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று நேற்றைய படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் சற்று முன் அந்த போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
ஆர்ஜே பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு சிங்கப்பூர் சலூன் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த படத்தில் அவர் சலூன் கடை வைத்திருக்கும் நபராக நடித்து வருகிறார் என்பது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது
 
’இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஏற்கனவே எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய மூன்று வெற்றி படங்களை தொடர்ச்சியாக கொடுத்த ஆர்ஜே பாலாஜி இந்த படத்தையும் வெற்றிப் படமாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்