ஜி வி பிரகாஷ் & ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் அடுத்த படம்… வெளியான அறிவிப்பு!

ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (14:17 IST)
தமிழ் சினிமாவில் நடிப்பு மற்றும் இசை என இரட்டைக் குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்பவர் ஜி வி பிரகாஷ். சமீபத்தில் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் ஐங்கரன் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன.

இப்போது மீண்டும் இசையில் அதிக கவனம் செலுத்தும் ஜி வி பிரகாஷ், கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்