திரையரங்கில் வெளியான ஆர்.ஆர்,ஆர் ட்ரெய்லர்! – வைரலாகும் வீடியோ!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (10:26 IST)
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் ட்ரெய்லர் திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ 

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இதன் பாடல்கள் அனைத்து மொழிகளிலும் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த 3ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியாக உள்ள நிலையில் முன்னதாக திரையரங்குகளில் ட்ரெய்லர் வெளியானது. அதை கூட்டமாக சென்று கண்டு களித்த ரசிகர்கள் அதை வீடியோ எடுத்து ட்விட்டரிலும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்