RRR இந்தியில் கூடுதல் காட்சிகள்... பாலிவுட்டை கவரும் ஸ்டண்ட்டா..?

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (07:45 IST)
இயக்குநர் ராஜமவுலி இதுவரை இயக்கிய படங்களில் ஆர்ஆர்ஆர் படம் மட்டுமே அதிக நீளம் கொண்ட படமாகும். 

 
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்' ( ரத்தம் ரணம் ரெளத்திரம்).

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி  ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்தது.  இதற்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் செய்து வந்தனர். ப்ரமோஷன் பணிகளுக்காகவே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.
ஆனால் அப்போது கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 550 திரையரங்குகளில் வெளியாகிறதாம். சுமார் 450 கோடி ரூபாயில் உருவான இந்த படம் இதுவரை 800 கோடி ரூபாய் வரை பிஸ்னஸ் செய்யப்பட்டுள்ளதாம்.
 
இயக்குநர் ராஜமவுலி இதுவரை இயக்கிய படங்களில் ஆர்ஆர்ஆர் படம் மட்டுமே அதிக நீளம் கொண்ட படமாகும். தெலுங்கில் இப்படம் 3 மணி, 2 நிமிடங்கள் ஓடுகிறது. இதன் இந்தி பதிப்பு 3 மணி, 7 நிமிடங்கள் ஓடுகிறதாம். ஆம், அஜய் தேவ்கன், அலியா பட் சம்பந்தப்பட்ட தெலுங்கில் இணைக்கப்படாத காட்சிகள் இந்தியில் கூடுதலாக 5 நிமிட காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்