இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்தது. இதற்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் செய்து வந்தனர். ப்ரமோஷன் பணிகளுக்காகவே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் நாளை மறுநாள் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் நடித்துள்ள நிலையில் ரசிகர்களின் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 550 திரையரங்குகளில் வெளியாகிறதாம். அதிலும் அதிகமாக தெலுங்கு மொழியிலேயே வெளியாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தமிழின் முன்னணி நடிகர்கள் படங்கள் இல்லாமல் வேற்று மொழி படம் ஒன்று இத்தனை திரையரங்குகளில் வெளியாவது பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில் உலகளவில் இந்த படத்துக்கு செய்யப்பட்டுள்ள வியாபாரம் பற்றிய தகவல் சினிமா உலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 450 கோடி ரூபாயில் உருவான இந்த படம் இதுவரை 800 கோடி ரூபாய் வரை பிஸ்னஸ் செய்யப்பட்டுள்ளதாம். தெலுங்கில் எடுக்கப்பட்ட படத்தை பேன் இந்தியா படமாக்கி செம்மையாக தயாரிப்பாளருக்கு கல்லா கட்டி கொடுத்துள்ளார் ராஜமௌலி என்று கருத்துகள் எழுந்துள்ளன.