தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.ஏ,சுரேஷ். இவருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.
தம்பிக் கோட்டை என்ற படத்தில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனவர் ஆர்.கே.சுதீஸ். அதன்பின்னர் விஜய்சேதுபதியின் தர்மதுறை, விஜய் ஆண்டனியின் சலீம் உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக அறிமுகமானார். வில்லன் மருது, ஸ்கெட்ஸ், பில்லா பாண்டி, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கும் மது என்பவரும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் இந்தத் தம்பதியர்க்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை ஆர்.கே, சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
We are very happy to share our newest blessing in our life . Our family is blessed with little girl and both mom & baby are doing good