திரும்பவும் மாநாடு படத்தை ஷுட் பண்ணும் வெங்கட் பிரபு… ஏன் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (17:51 IST)
மாநாடு படத்தின் சிலக் காட்சிகளை வெங்கட்பிரபு திரும்பவும் படமாக்கி வருகிறாராம்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் இந்த கொரோனாவுக்கு முன்னர் படமாக்கப்பட்ட காட்சிகள் சிலவற்றை மீண்டும் படமாக்கி வருகிறாராம் வெங்கட் பிரபு. ஏனென்றால் அந்த காட்சிகளில் சிம்பு மிகவும் குண்டாக இருப்பதால் கண்ட்னியூட்டி பிரச்சனை வந்துள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்