மலையாள பட ரீமேக்கில் நடிக்கும் முன்னணி நடிகை !

செவ்வாய், 23 மார்ச் 2021 (21:04 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது மலையாளத்தில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற படத்தில் தமிழ்- தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை இயக்குநர் ஆர். கண்ணன் இயக்குகிறார். இப்படத்தை மசாலா பிக்ஸ் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

 ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வரும் நிலையில் இப்படமும் வெற்றி பெறும் எனக் கூறப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா ரஜேஷின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்