RJ பாலாஜியின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்… கௌரவ வேடத்தில் பிரபல ஹீரோ?

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (15:46 IST)
இயக்குனர் கோகுல் சிம்புவை வைத்து ‘கொரோனா குமார்’ படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

நடிகர் சிம்புவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒப்பந்தம் செய்தார். அதில் முதல் படமான வெந்து தணிந்தது காடு திரைப்படம் அறிவிக்கப்பட்டு இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது படமாக கொரோனா குமார் என்ற படம் உருவாகிறது. இதை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுல் இயக்க உள்ளார்.

இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வந்ததாக சொல்லப்பட்டது. படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் பஹத் பாசிலும், மற்றொரு முக்கியமான வேடத்தில் நடிக்கை வைகைப்புயல் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது இந்த படம் கைவிடப்படுவதாக திடீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதையடுத்து இயக்குனர் கோகுல் RJ பாலாஜியை கதாநாயகனாக வைத்து ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் இயக்குனர் கோகுலின் நண்பரும் ஆஸ்தான நடிகருமான விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. RJ பாலாஜி நடித்துள்ள வீட்ல விசேஷம் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்