இளையராஜா என்னை அங்கீகரிக்கவில்லை.-விஜய்சேதுபதி பட இயக்குனர்!

சனி, 18 ஜூன் 2022 (23:30 IST)
தமிழ்சினிமாவில் முன்னணி இயக்குனர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி – காயத்ரி நடித்துள்ள படம் மாமனிதன். இப்படத்தை இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து தயரித்துள்ளனர்.

இப்படத்திற்கு அவர்கள் இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர். இந்த நிலையில், இன்று இப்படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.

இதில், பேசிய இயக்குனர் சீனுராமசாமி,  இப்படத்தை தயாரிக்க இளையராஜாவும், யுவனும் முடிவு செய்தனர். இப்படத்திற்கு முதலில் கார்த்திக் ராஜாவும், யுவனும் இசையமைக்க எண்ணினர். ஆனால், கார்த்திக் ராஜாவை நீக்கிவிட்டு, யுவனும், இளையராஜாவும் இசையமைத்தனர்.  இப்படத்தில், அவர்கள் விரும்பும் கவிஞர்களுக்கு பாடல் எழுத வாய்ப்பளித்தனர்.  நான் சிபாரிசு செய்த கவிஞர்களை அவர்கள் ஏற்கவில்லை.  ஆனால், இளையராஜா என்னை நிராககரித்தார்.பாடலின் இசை கோர்ப்புக்கும் என்னை அழைக்கவில்லை ஒரு இயக்குனராக எனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை; இப்படத்தின் புரமோஷனுக்கும் அவர் வரவில்லை  எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்