ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி!

வெள்ளி, 24 ஜூன் 2022 (15:49 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை, மலையாளத்தில்  ஒரு புதியப்படம், இந்தியில் 2 படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது, 5 படங்களில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. அதில், அஜித்61 படத்திற்குப் பிறகு, வினோத் இயக்கதிதில் விஜய்சேதுபதி ஒரு படத்தில்  நடிக்கவுள்ளதாகவும், அதேபோல், ஆறுமுகக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், கோகுல் இயக்கும் படத்திலும், அடுத்து மணிகண்டன் இயக்கத்தில்,  ஒரு படத்திலு அவர் நடிக்கபுள்ளார்.

அதனால், குறைந்தது அடுத்த 2 ஆண்டுகளுக்கு விஜய்சேதுபதி பிஸிதான் என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்