மகளுக்கு மனைவியின் பெயரை வைத்த ரியோ - முதன்முறையாக வெளியிட்ட போட்டோ!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (08:01 IST)
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அப்போது அதே தொலைக்காட்சியில் வேலை பார்த்த ஸ்ருதி என்பவரை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

ரியோ பிரபலமாவதற்கு முன்னரே ஸ்ருதி அவரது நண்பராக இருந்து வந்தார். இவர்கள் இருவரும் அண்ணா யுனிவர்சிட்டியின் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற போது அங்கு ஸ்ருதி திடீர்னு ஸ்ருதி தன் காதலைச்சொல்லி இருக்கிறார். பின்னர் இரண்டு நாள் கழித்து ஸ்ருதிக்கு ஓகே சொல்லியிருக்கிறார் ரியோ.


பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் ஸ்ருதி கர்ப்பமானார். மனைவிக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தார் ரியோ. அதைடத்து இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தற்ப்போது முதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரியோ அவளுக்கு " ரித்தி" என்று பெயரிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.  அதாவது தன் மனைவி ஸ்ருதியின் பெயரில் பாதியை பிரித்து "ரித்தி" என்று வைத்ததாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்