தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?.. பின்னணி என்ன?

vinoth

திங்கள், 27 ஜனவரி 2025 (10:35 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து பிப்ரவரி 21 ஆம் தேதி படம் ரிலீஸாகவுள்ளது.

இதையடுத்து   தனுஷ் மீண்டும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது.

அடுத்த கட்ட ஷூட்டிங் பாங்காங்கில் நடக்கவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை சில மாதங்களுக்கு முன்பே ஏப்ரல் 10 என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் இப்போது அதே தேதியில் அஜித்தின் “குட் பேட் அக்லி” திரைப்படமும் ரிலீஸாவதால் திட்டமிட்டபடி தியேட்டர்கள் கிடைக்காது என்பதால் ‘இட்லி கடை’ படம் ஏப்ரல் 24 ஆம் தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்