கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் மீண்டும் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்தது. அந்த படமும் சுமாரான வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இப்போது இந்த நிறுவனம் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகும் ஒன்ஸ்மோர் படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் டீசர் ஒன்று வெளியாகி பெரியளவில் கவனம் ஈர்த்தது. அதன் பின்னர் பாடல் ஒன்றும் ரிலீஸானது.
இந்த படம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது விடாமுயற்சி படத்தின் ரிலீஸாலும், ஒன்ஸ்மோர் படத்தின் பணிகள் நிறைவடையாத காரணத்தாலும் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என சொல்லப்படுகிறது.