போலி கணக்கை முடக்க புகாரளியுங்கள்- சினிமா பாடலாசிரியர் டுவீட்

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (16:40 IST)
தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் தாமரை. இவர், விண்ணைத்தாண்டி வருவாயா, கெத்து, என்னை அறிந்தால், விஸ்வாசம்  உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில்,  பிரபல இசையமையாளர்களின் இசையில்   பாடல் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், பாடலாசிரியர் தாமரையின் பெயரில் போலி வலைதள அக்கவுண்ட் தொடங்கப்பட்டுள்ளது. இன்று அந்தக் கணக்கில் இருந்து திரு விஜய், திரு லோகேஷ் கனகராஜ், செல்வி திரிஷா, திரு கெளதம், மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும்  இன்று வெளியாகும் லியோ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று டூவிட் பதிவிடப்பட்டிருந்தது.

இதைக் குறிப்பிட்டு கவிஞர் தாமரை தற்போது தன் எக்ஸ் எனும் டுவிட்டர் பக்கத்தில், மேற்குறிபிட்ட போலி அக்கவுண்டின் குறிப்பிட்ட டுவீட்டை பதிவிட்டு, ''இது போலிக்கணக்கு …இந்த போலி கணக்கை முடக்கப் புகாரளியுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்