நயன்தாராவின் ’’நெற்றிக்கண் ’’ஓடிடியில் ரிலீஸ் !

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (18:08 IST)
இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் நெற்றிக் கண் இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அவள் என்ற படத்தை இயக்கியவர் மிலிந்த் ராவ். இப்படத்தை அடுத்து அவர் ப்ளைண்ட் என்ற கொரிய படத்தை தமிழில் ’நெற்றிக்கண்’ என்ற பெயரில் ரிமேக் செய்துள்ளார், இப்படத்தின் நடிகை நயன் தாரா மற்றும் அஜ்மல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கில்

இதுவும் கடந்து போகும் என்ற பாடல் வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி வெளியாகி வைரலானது.

இந்நிலையில், தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில் திரையரங்கும் எப்போது திறக்கும் எனத் தெரியவில்லை.

எனவே, நெற்றிக்கண் படக்குழுவினர் ஓடிடியில் இப்படத்தை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி  ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படத்தை வெளியிடுவதாக முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்த அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் வெளியிடவுள்ளது. மேலும்  ரஜினியுடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களி நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்