பேட்ட, ஜகமே தந்திரம் படங்களுக்குள் சம்பந்தம் உண்டா? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!

புதன், 2 ஜூன் 2021 (18:54 IST)
பேட்ட, ஜகமே தந்திரம் படங்களுக்குள் சம்பந்தம் உண்டா? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் ஆகிய இரண்டு திரைப்படங்களையும் இயக்கியவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்த இரண்டு படங்களுக்கும் சம்பந்தம் உண்டு என சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வந்ததை அடுத்து இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார் 
 
பேட்ட படத்தில் ரஜினி வேலன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அவர் பிளாஷ்பேக்கில் வரும் கேரக்டர் போலவே தனுஷ் நடித்துள்ள சுருளி கேரக்டர் இருப்பதை அடுத்து இந்த இரண்டு படங்களுக்கும் இடையே சம்பந்தமுண்டு என்றும் வேலனின் மகன்தான் சுருளி என்றும் சமூக வலைத்தளத்தில் ஒரு வதந்தி பரவி வந்தது 
 
இதனை அடுத்து இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கமளித்துள்ளார். பேட்ட  படத்திற்கும் ஜகமே தந்திரம் படத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் இரண்டும் வேறு வேறு கதை என்றும் தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்