ராஷ்மிகாவுக்குப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை… சாதியப் பிரச்சனையாக மாறும் விவகாரம்!

vinoth
செவ்வாய், 11 மார்ச் 2025 (12:52 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான்.  கிரிக் பார்ட்டி எனும் படத்தில் நடித்த அவர் அதன் பின்னர் அதிகமாக கன்னட படங்களில் நடிக்கவில்லை. அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக எம் எல் ஏ ரவி கனிகா சமீபத்தில் பேசும்போது “கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து, கன்னட திரைப்படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மறுக்கிறார். 10 முறைக்கும் மேலும் நேரில் சென்று அழைத்தும் அவர் மதிக்கவில்லை. அவர் கர்நாடக மாநிலத்தையே அவமதிக்கிறார். அவருக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்” எனக் கூறியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ராஷ்மிகா தரப்பு மறுத்தது. தன்னை யாரும் திரைப்பட விழாவுக்கு அழைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா, அவர் பிறந்த சமூகத்தின் காரணமாகவே குறிவைத்துத் தாக்கப்படுகிறார் என்று கொடவா சமூக தேசிய கவுன்சில் தலைவர் நரேந்திரவந்த நாச்சப்பா “ராஷ்மிகாவுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என மத்திய மற்றும் கர்நாடக உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் இந்த விவகாரம் இப்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்