ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க இருக்கும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் இருந்து ஐபிஎல் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஐபிஎல் போட்டி நடைபெறும் இடங்களில் புகையிலை மற்றும் மது விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பொருட்களின் விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் எந்த இடத்திலும் புகையிலை, மது விளம்பரங்கள் இருக்காது. அதேபோல், அந்த மைதானத்தை சுற்றி உள்ள வளாகங்களில் இந்த இரண்டு பொருள்களின் விற்பனையும் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புகையிலை மற்றும் மதுவை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இளைஞர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வரும் இந்த பழக்கம் அவர்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுகாதாரத் துறையின் உத்தரவை ஐபிஎல் நிர்வாகம் முறையாக கடைபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.